×

சாருகேசி ஆடியோ, டிரைலர் ரஜினிகாந்த் வெளியிட்டார்

 

சென்னை: ஒய்.ஜி.மகேந்திரனின் மேடை நாடகத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம், ‘சாருகேசி’. செவ்வியல் இசை, உறவுகள், மனித உணர்வுகள், கலை பாரம்பரியத்தின் சாராம்சத்தை சொல்லும் இப்படத்தில் ஒய்.ஜி.மகேந்திரன், சத்யராஜ், சமுத்திரக்கனி, தலைவாசல் விஜய், சுஹாசினி, ரம்யா பாண்டியன், ராஜ் அய்யப்பா, மதுவந்தி அருண் நடித்துள்ளனர். தேவா இசை அமைக்க, சுரேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். அருண் விஷூவல்ஸ் தயாரிக்க, E5 எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் ஜே.ஜெயகிருஷ்ணன், வரும் ஜூன் 12ம் தேதி படத்தை திரைக்கு கொண்டு வருகிறார்.

இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலரை ரஜினிகாந்த் வெளியிட்டு வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் ஒய்.ஜி.மகேந்திரன், தேவா, ரம்யா பாண்டியன், அருண், திருமலை, ஜே.ஜெயகிருஷ்ணன், எம்.சி.பி.ஜெயச்சந்திரன், லஹரி மியூசிக் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். சுரேஷ் கிருஷ்ணா பேசுகையில், ‘திறமையான நடிகர்கள் மற்றும் படக்குழுவினருடன் இணைந்து பணியாற்றியதில் எனக்கு பெருமகிழ்ச்சி. இப்படம் எனது இதயத்துக்கு மிகவும் நெருக்கமானது’ என்றார்.

Tags : Rajinikanth ,Chennai ,Y.G. Mahendran ,Sathyaraj ,Samuthirakani ,Thalaivasal Vijay ,Suhasini ,Ramya Pandian ,Raj Ayyappa ,Madhuvanthi Arun ,Suresh Krishna ,Deva ,Arun Visuals ,J. Jayakrishnan ,E5 Entertainments ,
× RELATED என்னை கண்டாலே பாண்டிராஜுக்கு பிடிக்காது: சொல்கிறார் மிஷ்கின்