போதை வாலிபரின் மாறும் வாழ்க்கை: ஏன் என்னை ஏதோ செய்தாய்

 

சென்னை: ஏன் என்னை ஏதோ செய்தாய்’ படத்தை தயாரித்து, இயக்கி, ஹீரோவாக நடித்துள்ளார் டி. ஆண்டனி. அவர் கூறியது:
சிறு வயதிலேயே தாயை இழக்கும் ஹீரோ, வாழ்க்கையில் திசை மாறுகிறான். போதைக்கு அடிமையாகிறான். திடீரென ஒரு நாள் அவன் ஒரு பெண்ணை சந்திக்கிறான். இருளான ஹீரோவின் வாழ்க்கையில் ஒளியாக அந்த பெண் மூலம் காதல் நுழைகிறது. அதற்கு பின்பு அவனது வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதுதான் கதை.

வெளிநாட்டில் நல்ல சம்பளத்தில் இன்ஜினியரிங் வேலை பார்த்து வந்தேன். ஆனால் சினிமா ஆசையால் அந்த வேலையை துறந்துவிட்டு, சென்னைக்கு வந்துவிட்டேன். நான் சென்னை பையன்தான். நிறைய குறும்படங்களை இயக்கியுள்ளேன். ஒரு குறும்படத்தில் நானே நடித்தேன். அந்த அனுபவத்தில் இதில் ஹீரோவாக நடித்துள்ளேன். மும்பையை சேர்ந்த மாடல் அழகி மதுமிதா தாஸ் ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார். ஜீவா ரவி, ரெஜின்ரோஸ், ஆலம்ஷா உள்பட பலர் நடிக்கிறார்கள். அசோக் ஸ்ரீதரன், ஜெய்கர் ஹரிநாத் இசையமைத்துள்ளனர். ஜாய் ரெடா பின்னணி இசையமைத்துள்ளார். பீட்ரோ வில்லனி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Related Stories: