ஆப்ரிக்க இன யானைகள் விரைவில் அழிந்துவிடும் ஆபத்து: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

ஜெனிவா: ஆப்ரிக்க இன யானைகள் விரைவில் அழிந்துவிடும் ஆபத்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்விட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனிவாவில் அழிந்துவரும் விளங்குகளின் பாதுகாப்பு தொடர்பான 69வது மாநாடு தொடங்கியுள்ளது. ஆப்ரிக்காவின் பல பகுதிகளில் கடந்த 2006ம் ஆண்டு முதல் சட்டத்திற்கு புறம்பாக யானைகள் வேட்டையாடப்பட்டதால் அவற்றின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு 15 நிமிடத்திற்கு ஒரு ஆப்ரிக்க யானை கொல்லப்பட்டு வருவதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் யானைகளின் மக்கள் தொகை 62 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடி நடிவடிக்கை எடுத்து ஆப்ரிக்க இன யானைகளை பாதுகாக்காவிட்டால் அவற்றின் இனம் வெகு விரைவில் முற்றிலும் அழிந்துவிடும் அபாயம் உள்ளதாக மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: