சமுத்திரக்கனி இயக்கத்தில் ‘ஸ்கூல் பஸ்’

நவீன்குமார் பழனிவேல் எழுதி இயக்கியுள்ள `தடயம்’ என்ற வெப்தொடர், இன்று ஜீ5 தளத்தில் வெளியாகியுள்ளது. இதில் சமுத்திரக்கனி, ஷிவதா நாயர், ராஜ் திரந்தஸு, மூணாறு ரமேஷ், சுந்தரபாண்டியன், பிரேம், கொற்றவை நடித்துள்ளனர். இதுகுறித்து பேசிய சமுத்திரக்கனி ‘இந்த வெப்தொடரை குறுகியகாலத்தில் படமாக்கி முடித்தோம். இவ்வளவு பரபரப்பாகவும், கடினமாகவும் பணியாற்றி நீண்ட காலமாகிவிட்டது. தெலுங்கு படத்தில் நடிக்க சென்ற பிறகு நான் சொகுசாகி விட்டேன். காரணம், படப்பிடிப்புக்கு ஹீரோ வந்த பிறகுதான் என்னை கூப்பிடுவார்கள்.

எனவே, காலையில் 11 மணிக்கு ஸ்பாட்டில் இருப்பேன். ஹீரோ மாலை 4 மணிக்கு கிளம்பினால், என்னை கிளம்ப சொல்லிவிடுவார்கள். இப்படி சொகுசாக இருந்த என்னை, திடீரென்று காலையில் 8 மணியில் இருந்து இரவு 2 மணி வரை படப்பிடிப்பில் பங்கேற்க வைத்தது புதிய அனுபவமாக இருந்தது. ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டால், அமைதியாக இருப்பார்களே தவிர, எந்த பதிலும் சொல்ல மாட்டார்கள். இந்த அனுபவத்தையும் நான் பெற்றேன். வெப்தொடரில் வித்தியாசமான பாடிலாங்குவேஜுடன் நடித்தது சந்தோஷமாக இருந்தது.

எளியவர்களை அதிகாரம் எப்படி காயப்படுத்துகிறது என்பதை சொல்லியிருக்கிறோம்’ என்றார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சமுத்திரக்கனி இயக்கியுள்ள ‘ஸ்கூல் பஸ்’ என்ற படத்தின் விவரங்கள் விரைவில் வெளியாகிறது.

Related Stories: