சாய் பல்லவியை காப்பியடித்த மானசா

தெலுங்கில் வெளியான ‘கப்புள் ஃப்ரண்ட்லி’ படம், தமிழிலும் அதே பெயரில் வெளியானது. இதில் ஹீரோயினாக நடித்த மானசா வாரணாசியின் திறமைக்கு பாராட்டு குவிந்து வருகிறது. இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில், ‘இப்படத்தின் இயக்குனர் அஸ்வின் சந்திரசேகர், சாய் பல்லவியின் தீவிரமான ரசிகர் என்பதால், எனது கேரக்டரை பற்றி சொல்லும்போது, ‘சாய் பல்லவி நடித்த படங்களில், அவரது நடிப்பை மட்டும் பாருங்கள்’ என்றார். அவரே அப்படி வலியுறுத்தி சொல்லிவிட்டதால், உடனே சாய் பல்லவி நடித்த படங்களை விடாமல் பார்த்தேன்.

அவரது நடிப்பை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு ‘கப்புள் ஃப்ரண்ட்லி’ படத்தில் நடித்தேன். உண்மையிலேயே எனது யதார்த்தமான நடிப்புக்கு இவ்வளவு பாராட்டு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. பல்வேறு தரப்பு ரசிகர்கள் என்னை பாராட்டி வருவதை அறிந்து உணர்ச்சிவசப்பட்ட நிலையில், தொடர்ந்து வித்தியாசமான கேரக்டர்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். தமிழில் எனக்கான ஒரு இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன்’ என்றார்.

Related Stories: