சிவகார்த்திகேயன் படத்தில் ரம்யா நம்பீசன்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், இன்னும் எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. கிராபிக்ஸ் பணிகள், நடிகர்கள் ஒப்பந்தம், படப்பிடிப்புக்கான இடங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சிவகார்த்திகேயன் ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். ‘மாநாடு’ படத்துக்கு பிறகு வெங்கட் பிரபுவுடனும், ‘ஹீரோ’ படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயனுடன் கல்யாணி பிரியதர்ஷன் இணைந்துள்ளார். முக்கிய வேடத்தில் ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.

இதை அவர் தனது சோஷியல் மீடியா பதிவில் உறுதி செய்துள்ளார். தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் ‘சேயோன்’ என்ற படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறார். அதேவேளையில், ‘பார்க்கிங்’ ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்திலும் அவர் நடிக்கிறார்.

Related Stories: