மை டியர் டாலி: புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு உதவி

சென்னை: வி.ஜே.பப்பு மற்றும் அனுபமா இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘மை டியர் டாலி’. அரவிந்த் ராஜ் எழுதி, இயக்கி இருக்கும் இந்தத் திரைப்படத்தை சிம்ம மூர்த்தி சினிமாஸ் சார்பில் ஜெயராமசந்திரன் மற்றும் சிவராமகிருஷ்ணா தயாரித்துள்ளனர். இந்தப் படத்தில் கே.பி.ஒய். ராஜவேலு, சுதா, தாரா, கீர்த்தனா, ஆஷா, ராஜாமணி, பேபி தீக்ஷிதா, டொமினிக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

காதல் கதையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் மை டியர் டாலி திரைப்படம் உலகளவில் நேற்றுமுன்தினம் வெளியானது. இந்தப் படத்தில் ரத்த புற்றுநோய் பாதிப்பு குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், இந்தப் படத்தை தயாரித்துள்ள தயாரிப்பாளர் சிவராமகிருஷ்ணா படத்தின் வெளியீட்டை ஒட்டி புது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி மை டியர் டாலி திரைப்படத்தின் மொத்த வசூலில் ஒரு பகுதி ரத்த புற்றுநோய் பாதித்து சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார். இவரது இந்த அறிவிப்பை பார்த்து நெட்டிசன்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். சினிமா வட்டாரத்திலும் இதற்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது.

Related Stories: