சென்னை: நவீன்குமார் பழனிவேல் எழுதி இயக்கியுள்ள ‘தடயம்’ சீரிஸில், சமுத்திரக்கனி எஸ்ஐ ஆதியமான் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ஷிவதா இன்ஸ்பெக்டர் லக்ஷ்மி வேடத்தில் தோன்றுகிறார். 1990களின் இறுதிக் கால தென்னிந்திய கிராமப்புற பின்னணியில் அமைந்துள்ள இந்த சீரிஸ், கூர்மையான புத்திசாலித்தனமும் உறுதியும் கொண்ட ஒரு காவல் அதிகாரியின் விசாரணையைப் பின்தொடர்கிறது. கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் அதிர்ச்சியூட்டும் ஒரு முடிச்சை அவர் கண்டறிகிறார். இரவு நேரங்களில் தொடர்ந்து நடக்கும் கொலைகளை வைத்து இந்த கதை பின்னப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 27ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
