சென்னை: பாடகரும், இசைக் கலைஞருமான ஹர்ஷவர்தன் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். இவர் சமீபத்தில் ‘மாயம் நீயடி’ எனும் மியூசிக் வீடியோ ஆல்பத்தை வெளியிட்டிருக்கிறார். ஹர்ஷவர்தன் இந்த மியூசிக் வீடியோ ஆல்பத்திற்கான பாடலுக்கு இசையமைத்து, பாடி, ஆடி நடித்திருக்கிறார். இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத பின்னணி பாடகி சுப்லாஷினியுடன் இணைந்து ஹர்ஷவர்தன் பாடி இருக்கிறார். இந்த பாடலுக்கான வீடியோவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹர்ஷவர்தன் மற்றும் நடிகை சஞ்சனா திவாரி ஆகியோர் இணைந்து பாடலில் தோன்றி காதல் கெமிஸ்ட்ரியை கச்சிதமாக ரசிகர்களுக்கு கடத்தியுள்ளனர். ஹர்ஷவர்தன் ஏற்கனவே இரண்டு சுயாதீன இசை ஆல்பத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறார். இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை லட்சக்கணக்கான ஃபாலோயர்ஸ்கள் பின் தொடர்கிறார்கள். ஹர்ஷவர்தன் விரைவில் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார் என்பதும் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
