×

பிளாக் காமெடி ஜானரில் 4 இடியட்ஸ்

சென்னை: கே.முரளிதரனின் மகன்கள் எம்.கோகுல் கிருஷ்ணன், டாக்டர் ஸ்ரீவத்ஸன் இணைந்து, லட்சுமி மூவி மேக்கர்ஸின் 27வது படமாக ‘4 இடியட்ஸ்’ என்ற படத்தை தயாரித்துள்ளனர். இதை சஜோ சுந்தர் முருகேசன் எழுதி இயக்கியுள்ளனர். இவர் ஹரி, பிரகாஷ்ராஜ், ‘பொம்மரிலு’ பாஸ்கர் ஆகியோர் இயக்கிய படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியவர். புகழ், ரவிமரியா, பிரக்யா நயன், வின்சென்ட் அசோகன், ‘கும்கி’ அஸ்வின், திடியன், இந்திரன், பாவா லட்சுமணன், ‘மகாநதி’ சங்கர், சி.எம்.பாலா, விஜய் யோன் நடித்துள்ளனர். பிளாக் காமெடி ஜானரில் படம் உருவாகியுள்ளது. திருப்பூர் வி.கே.முருகேசன், ஜியோ ஏ.என்.செல்வராஜ் இணை தயாரிப்பு செய்துள்ளனர். சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. யு.கே.செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்ய, எஸ்.என்.பாசில் அரங்கம் அமைத்துள்ளார். சுபாஷ் முனிரத்னம் எடிட்டிங் செய்ய, பிரபாகரன் வசனம் எழுதியுள்ளார்.

Tags : Chennai ,K. Muralitharan ,M. Gokul Krishnan ,Dr ,Srivatson ,Lakshmi ,Movie ,Sajo Sundar Murukesan ,Hari ,Prakasraj ,' Baskar ,Praise ,Ravimaria ,Pragya Nayan ,Vincent Ashohan ,' Aswin ,Thidian ,Indra ,Bawa Lakshmanan ,' Shankar ,C. M. Bala ,Vijay Yoon ,
× RELATED கணவரின் கதையில் நடிக்கும் சமந்தா