- விஷால்
- தன்ஷிகா
- சென்னை
- சாய் தான்ஷிகா
- ஷாயாஜி ஷிண்டே
- கபீர் துஹான் சிங்
- எஸ்தர்
- கௌதம் கிருஷ்ணா
- தீபக் தேவ்
- பூபதி
- செந்தில்குமார்
- மோனிகா சினி பிலிம்ஸ்
- ரஜினி
- Kabali
- யோகி
சென்னை: சாய் தன்ஷிகா, முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘யோகிடா’. இதில் ஷாயாஜி ஷிண்டே, கபீர் துஹான் சிங், எஸ்தர் மற்றும் பலர் நடித்துள்ளனர். கவுதம் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ளார். தீபக் தேவ் இசையமைத்துள்ளார். பூபதி ஒளிப்பதிவு செய்துள்ளார். பிப்.6ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. மோனிகா சினி ஃபிலிம்ஸ் சார்பில் செந்தில்குமார் தயாரித்துள்ள இப்படம் பற்றி, சாய் தன்ஷிகா கூறும்போது, “கபாலி படத்தில் ரஜினி சாரின் மகளாக நடித்தேன். அதில் என்னுடைய பெயர் யோகி. அப்படித்தான் இந்த யோகி டா ஆரம்பித்தது. இந்த படத்துக்காக டைட்டிலை யோசிக்கும் போது, ‘கபாலி’ படத்தில் உள்ளது போல ஹேர் ஸ்டைல், ஆக் ஷன் இந்த படத்தில் இருந்தது. அதனால் தான் இந்த டைட்டில் வைத்தோம்.
கபாலி படத்துக்காக நிஜமாகவே முடியை வெட்டினேன். இந்தப் படத்தில் விக் வைத்துள்ளேன்’’. யோகிடா பற்றி சாய் தன்ஷிகா விவரித்த பிறகு, உங்களுக்கும், விஷாலுக்கும் எப்பொழுது திருமணம் நடக்கும் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் அவரோ வெட்கப்பட்டு சிரித்தபடி அதையே பதிலாக தந்தார். நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்து அதன் திறப்பு விழாவை நடத்தாமல் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்கிற முடிவில் இருக்கிறார் விஷால். 2025ம் ஆண்டே கட்டிட திறப்பு விழா நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது தள்ளிப்போயுள்ளது.

