சான்வி மேக்னா: பெண்களின் அன்பு ஸ்பெஷலானது

சென்னை: ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் நடித்து கடந்த ஆண்டு வெளியான படம், ‘குடும்பஸ்தன்’. சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், பாலாஜி சக்திவேல் நடித்த இப்படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி சான்வி மேக்னா வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ‘நான் எனது
பயணத்தை தெலுங்கில் தொடங்கினேன். அங்கு கிடைத்த அன்பிற்கு எப்போதும் நன்றியுள்ளவளாக இருப்பேன். ‘குடும்பஸ்தன்’ படம்தான் எனக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இப்படம்தான் எனது முதல் பிளாக்பஸ்டர்.

நான் 2016ல் இருந்து நடித்து வருகிறேன். இப்படம் எதிர்பார்த்த அனைத்தையும் எனக்கு கொடுத்தது. திரையரங்கு முதல் ஓடிடி தளம் வரை தமிழ்நாடு முழுவதும் மக்களிடம் இருந்து, பெண்களிடம் இருந்து தொடர்ந்து நான் பெற்று வரும் அன்பும், மரியாதையும் எனக்கு ஸ்பெஷலானது. இப்போது நான் இரண்டு படங்களில் நடிக்கிறேன். இரண்டுமே இந்த ஆண்டு ரிலீசாகிறது’ என்றார்.

Related Stories: