மங்காத்தா 2 அஜித்துக்காக வெயிட்டிங்: வெங்கட் பிரபு தகவல்

சென்னை: அஜித் குமாரின் 50வது படம் என்ற முத்திரையுடன் ‘மங்காத்தா’ படம் வெளியாகி இருந்தது. தற்போது அப்படம் மறுவெளியீட்டிலும் வெற்றிபெற்றுள்ளது. சென்னையில் தியேட்டரில் ரசிகர்களுடன் படத்தை பார்த்த இயக்குனர் வெங்கட் பிரபு, பிறகு அவர்களுடன் பேசினார். அப்போது ரசிகர்கள், ‘மங்காத்தா 2’ எப்போது என்று ஆர்வத்துடன் கேட்டனர். அதற்கு பதில் அளித்த வெங்கட் பிரபு, ‘அஜித் குமார் சொன்னால் ஓ.கே. முதல் பாகத்தை அவர்தான் சொன்னார். இரண்டாம் பாகத்தையும் அவர்தான் சொல்ல வேண்டும்’ என்றவுடன் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

தற்போது கார் ரேஸில் ஈடுபட்டுள்ள அஜித் குமார், அடுத்து ‘குட் பேட் அக்லி’ என்ற படத்தை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கிறார். இதை முடித்த பிறகே அடுத்த படம் குறித்து அறிவிப்பார் என்று தெரிகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2011ல் திரைக்கு வந்து வெற்றிபெற்ற ‘மங்காத்தா’ படத்தில் அர்ஜூன், திரிஷா, ராய் லட்சுமி, ஆண்ட்ரியா, அஞ்சலி நடித்தனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்தார். அவரது இசையில் வெளியான பாடல்கள் மற்றும் தீம் மியூசிக்கிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் வெங்கட் பிரபு அளித்துள்ள தகவல், அஜித் குமாரின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இத்தகவல் சோஷியல் மீடியாவில் வைரலானது.

Related Stories: