எனது பின்னடைவுக்கு நானே காரணம்: பாபி சிம்ஹா

சென்னை: பாபி சிம்ஹா நடித்துள்ள படம் ‘வசந்த முல்லை’. இப்படத்தை அவரது மனைவியும் நடிகையுமான ரேஷ்மி மேனனும், ராம் தல்லூரியும் இணைந்து தயாரித்துள்ளனர். அறிமுக இயக்குநர் ரமணன் புருஷோத்தமா இயக்கி உள்ளார். கஷ்மீரா பர்தேசி ஹீரோயின். தமிழில் கவுரவ வேடத்தில் ஆர்யா, கன்னடத்தில் ரக்‌ஷித் ஷெட்டி நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாபி சிம்ஹா கூறியதாவது: வசந்த முல்லை படத்தை எனது மனைவியும் நண்பரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இந்த படம் கொரோனா காலத்தை சந்தித்தது. திட்டமிட்ட பட்ஜெட்டை விட அதிகமானது. இதனால் பல பிரச்னைகள். மனைவியோடும் பிரச்னை. எல்லாவற்றையும் தாண்டி இந்த படம் தற்போது தயாராகி உள்ளது. ஆரம்ப காலத்தில் இருந்த எனது வளர்ச்சி படிப்படியாக குறைந்தது. அதற்கு காரணம் நான்தான். கதை, கேரக்டர் தேர்வில் தெளிவில்லாமல் இருந்தேன். நண்பர்களுக்காக கதை பற்றியோ கேரக்டர் பற்றியோ கவலைப்படாமல் நடித்தேன். அனுபவங்கள்தான் நல்ல பாடங்களாக அமையும் என்பார்கள். எனது அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

Related Stories: