காஷ்மீரில் கடும் குளிர் விஜய் பட ஷூட்டிங்கிலிருந்து திரும்பினார் திரிஷா

சென்னை: காஷ்மீரில் கடும் குளிர் நிலவுவதால் விஜய் பட ஷூட்டிங்கிலிருந்து திரிஷா திரும்பியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் லியோ. அனிருத் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். லலித்குமார் தயாரிக்கிறார். சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் மேனன் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடந்தது. இரண்டாவது ஷெட்யூலுக்காக விஜய், திரிஷா, பிரியா ஆனந்த் உள்பட படக்குழுவினர் காஷ்மீர் சென்றனர்.

தொடர்ந்து 15 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் படத்தின் தலைப்பு அறிவிப்பு டீசர் சமீபத்தில் வெளியானது. இதையடுத்து காஷ்மீரில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வந்தது. அங்கு கடும் பனிப்பொழிவுடன் குளிர் நிலவுவதால் திரிஷாவுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து காஷ்மீருக்கு சென்ற மூன்றே நாட்களில் அவர் சென்னை திரும்பியுள்ளார். அதே சமயம், தனது காட்சிகளை முடித்துவிட்டுதான் திரிஷா திரும்பியதாகவும் அவர் நலமாக இருக்கிறார் என்றும் படக்குழு தரப்பில் கூறியுள்ளனர்.

Related Stories: