சிம்புவின் நம்ம சத்தம்

திரைக்கு வந்த ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ ஆகிய படங்களை தொடர்ந்து ஒபிலி என்.கிருஷ்ணா இயக்கியுள்ள படம், ‘பத்து தல’. ஸ்டுடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். சிம்பு, கவுதம் கார்த்திக், கவுதம் வாசுதேவ் மேனன், பிரியா பவானி சங்கர், கலையரசன் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.

 கன்னடத்தில் கடந்த 2017ல் வெளியான ‘முஃப்தி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள இதில், ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கேரக்டரில் சிம்பு நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் முடிந்தது.

இந்நிலையில், நேற்று சிம்புவின் பிறந்தநாளையொட்டி, ‘பத்து தல’ படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விவேக் எழுதிய ‘நம்ம சத்தம்’ என்ற பாடல் வெளியிடப்பட்டது. ‘அக்கரயில நிக்கிறவன எட்டுது நம்ம சத்தம்’ என்ற இப்பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளார். இப்படம் வரும் மார்ச் 30ம் தேதி திரைக்கு வருகிறது. சிம்புவுக்குஜோடியில்லை. கவுதம் கார்த்திக் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

Related Stories: