விஜய் படத்தின் தலைப்பு லியோ : ஆயுதபூஜைக்கு ரிலீசாகிறது

‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் 67வது படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அனிருத் இசை அமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் நடிக்கின்றனர். அன்பறிவு சண்டைக் காட்சிகளை வடிவமைக்க, தினேஷ் நடனப் பயிற்சி அளிக்கிறார்.

இதற்கு முன்பு விஜய்யும், திரிஷாவும் ‘கில்லி’, ‘குருவி’, ‘ஆதி’, ‘திருப்பாச்சி’ ஆகிய படங்களில் இணைந்த நடித்திருந்தனர். தற்போது 14 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அவர்கள் இணைந்து நடிப்பதால், அவர்களுடைய ரசிகர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், விஜய்யின் 67வது படத்தின் டைட்டில் நேற்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

அதன்படி நேற்று தலைப்பு வெளியிடப்பட்டது. படத்துக்கு லியோ என தலைப்பு வைத்துள்ளனர். வில்லன்கள் விஜய்யை தேடி கார்களில் வர, விஜய், தனது கூடாரத்தில் வாளை எடுத்து தயார் ஆவது போல் டீசர் வெளியிடப்பட்டது. ஆயுதபூஜையை முன்னிட்டு அக். 19ம் தேதியன்று இந்த படம் ரிலீசாகிறது.

Related Stories: