அமானுஷ்ய கதையில் ஜனனி

தக்‌ஷிணாமூர்த்தி ராம்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், சரத்குமார் நடிக்கும் படம் ‘கிரிமினல்’. மதுரை பின்னணியில் கிரைம் திரில்லர் படமாக உருவாகும் இதில் ஜனனி அய்யர் ஒப்பந்தமாகியுள்ளார். சாம் சி.எஸ் இசை அமைக்க, பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்கிறார். தவிர, மேலும் ஒரு படத்தில் ஜனனி அய்யர் நடித்து வருகிறார். காஜல் அகர்வால், ரெஜினா ஆகியோருடன் அவர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள ’கருங்காப்பியம்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

அமானுஷ்ய சக்தியை மையமாக வைத்து உருவாகியுள்ள இதில் ஆதவ் கண்ணதாசன், கலையரசன், யோகி பாபு நடித்துள்ளனர். விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்ய, பிரசாத் இசை அமைத்துள்ளார். கார்த்திகேயன் இயக்கியுள்ளார். ’கருங்காப்பியம்’ என்ற புத்தகத்தில், அடுத்து வரும் 100 வருடங்களைக் கணித்து எழுதியுள்ள நிலையில், அப்புத்தகத்தில் குறிப்பிட்டபடி நடக்கிறதா என்பது இப்படத்தின் கதை.

Related Stories: