அப்பா ஆனார் அட்லீ

தமிழில் ஆர்யா, நயன்தாரா, ஜெய் நடித்த ‘ராஜா ராணி’, விஜய் நடித்த ‘மெர்சல்’, ‘தெறி’, ‘பிகில்’ ஆகிய படங்களை இயக்கியவர், அட்லீ. தமிழில் ஓரிரு படங்கள் தயாரித்துள்ளார். தற்போது இந்தியில் ஷாருக்கான், நயன்தாரா நடிக்கும் ‘ஜவான்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். கடந்த 2014ல் நடிகை பிரியாவை காதல் திருமணம் செய்த அவர், தற்போது 8 வருடங்களுக்குப் பிறகு அப்பா ஆகியுள்ளார்.

அட்லீ, பிரியா தம்பதிக்கு கடந்த ஜனவரி 31ம் தேதி ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுபற்றி அட்லீ கூறுகையில், ‘அவர்கள் சொல்வது சரிதான். இப்படியொரு உணர்வு உலகில் இல்லை. பெற்றோரின் புதிய அற்புதமான சாகசம் இன்று தொடங்குகிறது’ என்றார். அட்லீ, பிரியா தம்பதிக்கு விஜய் போன் செய்து வாழ்த்து தெரிவித்தார். ஷாருக்கான், நயன்தாரா இருவரும் பூச்செண்டு கொடுத்து வாழ்த்தினர்.

Related Stories: