ஏர்இந்தியா மீது குஷ்பு புகார்

ஏர் இந்தியா விமான நிறுவனம் மீது நடிகை குஷ்பு புகார் கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன் குஷ்புவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் மும்பையிலிருந்து அவர் சென்னைக்கு விமானத்தில் வந்தார். இது குறித்து டிவிட்டரில் குஷ்பு வெளியிட்ட பதிவில், ‘முழங்காலில் அடிபட்ட ஒருவரை அழைத்து செல்ல உங்களிடம் சக்கர நாற்காலி கூட இல்லை.

 இன்னொரு நிறுவனத்திடம் கேட்டு வாங்கி வருவதாக கூறி கடும் வலியுடன் அரை மணி நேரம் காக்க வைத்தனர்’ என தெரிவித்துள்ளார். இதற்காக குஷ்புவிடம் அந்நிறுவனம் மன்னிப்பு கேட்டிருக்கிறது.

Related Stories: