விவசாயத்தை போதித்த கார்த்தி

சென்னையில் நடந்த உழவன் அறக்கட்டளை விழாவில் பேசிய கார்த்தி, விவசாயம் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள உழவன் அறக்கட்டளையைத் தொடங்கினேன். சமுதாயத்தில் விவசாயிகளின் மீதுள்ள மரியாதையும், அறிவும் குறைவாக இருக்கிறது. அவர்களை அங்கீகரிப்பதும், அடையாளப்படுத்துவதும் முக்கியம். அதற்காகத்தான் உழவர் விருதுகள் வழங்கும் பணியைத் தொடங்கினோம். சமூகத்தில் இதன் பிரதிபலிப்பு நிச்சயமாக இருக்கும் என்பதற்காகவே ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து இவ்விழாவை நடத்தி வருகிறோம்.

ஒரு மொழியை இழந்தால், அந்தக் கலாச்சாரமே அழிந்துவிடும். ஒரு குறிப்பிட்ட விதையை நாம் இழந்துவிட்டால், அதை மீண்டும் உருவாக்க முடியாது. நமது குழந்தைகளிடம், சாப்பாட்டை வீணாக்காதீர்கள் என்று சொல்கிறோம். ஆனால், சாப்பாடு எங்கிருந்து வருகிறது என்று சொல்லித் தருகிறோமா? நான் என் மகள் உமையாளை அழைத்துச் சென்று, ஒருநாள் முழுவதும் விவசாய நிலத்தைச் சுற்றிக் காண்பித்தேன். அனைத்துப் பள்ளிகளிலும் விவசாய சுற்றுலாவைக் கட்டாயமாக்க வேண்டும் என்றார்.

Related Stories: