×

பெண்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கு தீர்வு சொல்லும் மெய்ப்பட செய்

ஆதவ் பாலாஜி, மதுனிகா, பி.ஆர்.தமிழ்ச்செல்வம், ஆடுகளம் ஜெயபாலன்,  ஓ.ஏ.கே.சுந்தர், ராஜ்கபூர், ராகுல் தாத்தா, சூப்பர் குட் சுப்பிரமணி, விஜய் கணேஷ் நடித்துள்ள படம், ‘மெய்ப்பட செய்’. இதை எஸ்.ஆர்.ஹர்ஷித் பிக்சர்ஸ் சார்பில் பி.ஆர்.தமிழ்ச்செல்வம் தயாரித்துள்ளார். வேலன் எழுதி இயக்கியுள்ளார். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் எதனால் நடக்கிறது? அதை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து இப்படம் பேசியிருக்கிறது.

சமூக அக்கறை கொண்ட சில நண்பர்கள் சென்னைக்கு வந்து பிழைப்பு நடத்த வழி தேடும்போது, தங்கள் கண்முன்னே நடக்கின்ற பாலியல் குற்றவாளிகளின் கொலைவெறி ஆட்டத்தைப் பார்க்கின்றனர். சட்டத்தில் இருக்கும் சில ஓட்டைகளை வைத்து பகிரங்கமாக பொதுமக்களையும், காவல்துறையையும் தங்களது ரவுடித்தனத்தாலும், ஆளுமையாலும் அடிபணிய வைக்கும் அந்தக் கும்பலை அவர்கள் என்ன செய்தார்கள் என்பது கதை.

ஆர்.வேல் ஒளிப்பதிவு செய்ய, பரணி இசை அமைத்துள்ளார். ெசன்சாரில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள இப்படம், வரும் 27ம் தேதியன்று திரைக்கு வருகிறது. வழக்கமாக படங் களில் சொல்லப்படுகின்ற சில பிரச்னைகளுக்கு தீர்வு சொல்ல மாட்டார்கள். அதை மக்கள் கணிப்புக்கே விட்டுவிடுவார்கள்.
ஆனால், ‘மெய்ப்பட செய்’ படத்தில் பெண்கள் மீதான பாலியல் குற்றங்களை எப்படி தடுப்பது என்று தீர்வு சொல்லப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED ஓவியாவுக்கு கிஸ் கொடுத்த காதலன் யார்?