தமிழ் சினிமாவுடன் தொடர்பில் இருக்கிறேன்: நாகார்ஜுனா

சென்னை: நாகார்ஜுனா நடித்துள்ள ‘தி கோஸ்ட்’ படம், தமிழில் ‘ரட்சன்-தி கோஸ்ட்’ என்ற பெயரில் நேற்று வெளியானது. இதன் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் நாகார்ஜுனா பேசியதாவது: நான் சென்னையில் பிறந்து வளர்ந்து படித்தவன். சென்னையின் எல்லா ரோடும், பாலங்களும் எனக்கு தெரியும். தமிழ் சினிமாவுடன் நல்ல தொடர்பில் இருக்கிறேன். ‘ரட்சகன்’ படம் மூலம் அறிமுகமானாலும், ‘உதயம்’ படத்தின் மூலம் புகழ்பெற்றேன். தொடர்ந்து பல தமிழ்ப் படங்களில் நடித்து தமிழ்நாட்டு மக்களுடன் தொடர்பில் இருக்கிறேன். சென்னை வரும்போது சொந்த ஊருக்கு வருவது போன்று இருக்கும். கொரோனா காலம் பல துயரங்களை தந்தாலும், சினிமா மொழிகளை கடந்து கொண்டு சென்றிருக்கிறது. அனைத்து மொழி படங்களையும் மக்கள் பார்க்கிறார்கள்.

இப்போது சினிமாவுக்கு மொழி, நாடு முக்கியமல்ல. நல்ல கதைதான் முக்கியம். கொரோனாவுக்கு பிறகு மக்கள் தியேட்டருக்கு வந்து பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்க்கிறார்கள். சினிமா இப்போது எல்லா தளங்களிலும் கிடைக்கிறது என்றாலும், சினிமா என்பது இப்போது விஷூவல் மீடியா மட்டுமல்ல, சவுண்ட் மீடியாவும் கூட. மிகச்சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் சினிமாவில் நவீன ஒலியை கடும் உழைப்பால் சினிமாவுக்கு தருகிறார்கள். அந்த அனுபவத்தைப் பெற மக்கள் தியேட்டருக்கு வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இப்படத்திலும் சவுண்டிற்கு மிகப் பெரிய முக்கியத்துவம் இருக்கிறது. இது யுனிவர்சல் சப்ஜெக்ட் படம். அதனால் தெலுங்கு, தமிழ் உள்பட பல இந்திய மொழிகளில் வெளியானது. நானும், படத்தின் நாயகி சோனல் சவுகானும் கடுமையான பயிற்சிகள் எடுத்து நடித்திருக்கிறோம். பிரவீன் சத்தாரு கடுமையாக உழைத்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறார். இப்படத்துக்கு தமிழ் மக்கள் ஆதரவு தரவேண்டும். இவ்வாறு நாகார்ஜுனா பேசினார்.

Related Stories: