நடிகை குஷ்புவுக்கு முதுகு எலும்பு பிரச்னை

சென்னை: சினிமா, டி.வி மற்றும் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருபவர், குஷ்பு. நேற்று மாலை அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தனது முதுகு எலும்பு தொடர்பான பிரச்னைக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தற்போது வீடு திரும்பி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், 2 நாட்கள் ஓய்வு எடுத்துவிட்டு, மீண்டும் வேலைக்கு திரும்பி விடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்புத்தளத்துக்கு சென்றது ஏன் என்பதற்கு குஷ்பு பதில் அளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: ‘வாரிசு’ படத்தில் நான் நடிக்கவில்லை. செட்டில் எனது நண்பர்கள் பிரபு, சரத்குமார் இருந்தனர். அவர்களை ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு சந்தித்ததில் மகிழ்ச்சி.

அதனால் அவர்களுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன். அவர்களுடன் சேர்ந்து போட்டோவும் எடுத்துக்கொண்டேன். நாங்கள் மூவரும் எப்போதும் ஷூட்டிங் ஸ்பாட்டில் நிறைய அரட்டை அடிப்போம். அந்தக்காலம் அப்படியே திரும்பியது போல் இருந்தது. நான் ‘வாரிசு’ படப்பிடிப்புத்தளத்துக்கு சென்றது விஜய்யைப் பார்க்கத்தான். அதற்குள் நிறைய வதந்திகள் பரவி விட்டன.

Related Stories: