×

விஜய் சேதுபதி அளவுக்கு நடிக்கல... ஹிரித்திக் ரோஷன் ஒப்புதல்

மும்பை: விக்ரம் வேதா இந்தி படத்தில் விஜய் சேதுபதி அளவுக்கு நான் நடிக்கவில்லை என்றார் ஹிரித்திக் ரோஷன். விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா படம், அதே பெயரில் இந்தியில் ரீமேக் ஆகியுள்ளது. இந்த படம் இன்று திரைக்கு வருகிறது. இதில் விஜய் சேதுபதி கேரக்டரில் ஹிரித்திக் ரோஷன் நடித்துள்ளார். அவர் கூறியது: விக்ரம் வேதா படத்தின் திரைக்கதைதான் என்னை அதில் நடிக்க வைத்தது. அதேபோல் எனது கேரக்டரும் பிடித்திருந்தது. தமிழ் படத்தை பார்த்தபோது, விஜய் சேதுபதியின் கேரக்டரை மிகவும் விரும்பினேன். ஆனால், அதை அப்படியே காப்பி அடிக்காமல் நடிக்க முடிவு செய்தேன். என்னால் முடிந்ததை செய்திருக்கிறேன். அதன் பிறகு எனது நடிப்பை பற்றி ரசிகர்கள்தான் எதையும் சொல்ல வேண்டும். விஜய் சேதுபதி தமிழில் சிறப்பாக நடித்திருந்தார். அந்த அளவுக்கு எல்லாம் நான் நடித்ததாக சொல்ல மாட்டேன். என் அளவுக்குதான் நான் அந்த கேரக்டரை கையாண்டுள்ளேன். முதல் முறையாக சைப் அலிகானுடன் நடித்துள்ளேன். அவரும் படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். இந்த படத்தில் முதலில் ஷாருக்கான் பிறகு ஆமிர்கான் நடிக்க இருந்தது பற்றியெல்லாம் எனக்கும் தெரியும். அவர்கள் நடிக்காமல் போனது பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது. இந்த படத்தை புஷ்கர் காயத்ரி பெரும் சிரத்தையுடன் அர்ப்பணிப்புடன் உருவாக்கி இருக்கிறார்கள். இவ்வாறு ஹிரித்திக் கூறினார்.

Tags : Vijay Sethupathi ,Hrithik Roshan ,
× RELATED என்னைப்போல் சினிமாவை நேசிக்கும் விஜய் சேதுபதி: கமல்ஹாசன் பெருமிதம்