×

படம் தயாரிக்கிறார் மலாலா

லண்டன்: சமூக ஆர்வலரான மலாலா படம் தயாரிப்பில் ஈடுபட இருக்கிறார். பாகிஸ்தானை சேர்ந்த மலாலா, பெண்கள் படிக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதற்கான முயற்சிகளிலும் தீவிரமாக ஈடுபட்டார். இதற்காக அவரை பாகிஸ்தான் பழமைவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளானார். அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது. பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வரும் மலாலா, இப்போது ஆவணப் படம் ஒன்றை தயாரிக்க உள்ளார். தென்கொரியாவில் ஹொனயோ என்ற ஒரு சமூகம் இருக்கிறது. இந்த சமூகத்தை சேர்ந்த பெண்கள் மீன் பிடிக்கும் வேலை செய்கிறார்கள். அவர்களை பற்றிய கதையாக ஒரு ஆவண படத்தை மலாலா தயாரிக்கிறார். சு கிம் என்பவர் இதை இயக்குகிறார். இவர் கொரியன் இயக்குனர். ஹாலிவுட் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஆவணப் படத்தை மலாலா தயாரிக்க உள்ளார். ‘சிரமத்தில் இருக்கும் பெண்களை கண்டறிந்து அவர்களின் பிரச்னைகளை தீர்த்து, கல்விக்கு வழிகாட்டவே எங்கள் அமைப்பு விரும்புகிறது. அதற்கான ஒரு முயற்சிதான் இந்த ஆவணப் படம்’ என்றார் மலாலா.

Tags : Malala ,
× RELATED பாலின பாகுபாடு மனித குலத்துக்கு...