பொன்னியின் செல்வன் 2ம் பாகம் எப்போது? மணிரத்னம் தகவல்

சென்னை: கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை அதே பெயரில் 2 பாகங்களாக இயக்கியுள்ளார், மணிரத்னம். இதன் முதல் பாகம், வரும் 30ம் தேதி திரைக்கு வருகிறது. இதுபற்றி அவர் கூறியதாவது: நான் ‘பொன்னியின் செல்வன்’ நாவலுக்கு தீவிர ரசிகன். இந்நாவலைப் படித்து முடித்த பிறகு 2 பாகங்கள் தேவைப்படும் என்று உணர்ந்தேன். படிக்கும்போது, அதைப் படமாக உருவாக்குவேன் என்று நினைக்கவில்லை. படம் உருவாக்கும்போது, எந்த கேரக்டரில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தேர்வு செய்து நடிக்க வைத்தேன். அனைவரும் அந்தந்த கேரக்டராகவே மாறியிருக்கின்றனர். வசனங்கள் இன்றைய காலக்கட்டத்துக்கு ஏற்ப, ரசிகர்கள் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய அளவுக்கு தூயதமிழில் இருக்கும். நந்தினி கேரக்டரில் பாலிவுட் நடிகை ரேகாவை யோசித்திருந்தோம். பிறகு ஐஸ்வர்யா ராய் நடித்தார். எழுத்தாளர் ஜெயமோகன், நடிகர் குமரவேல் இருவரும் வசன உருவாக்கத்தில் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர். ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் ரிலீசான 7 மாதங்களுக்குப் பிறகு 2ம் பாகம் திரைக்கு வரும். 2ம் பாகத்தில் கிராபிக்ஸ் பணிகள் நிறைய இருக்கிறது.

Related Stories: