சீதா ராமம் 2ம் பாகத்தில் மீண்டும் இணையும் ஜோடி

சென்னை: தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் திரைக்கு வந்த படம், ‘சீதா ராமம்’. ஹனு ராகவபுடி இயக்கிய இதில் துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாகூர் நடித்திருந்தனர். இப்படத்தைப் பார்த்த ரசிகர்கள், துல்கர் சல்மானுக்கு மிருணாள் தாகூர் மிகப் பொருத்தமான ஜோடி என்று கமென்ட் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில், தற்போது ஹனு ராகவபுடி அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டதாகவும், இப்படத்தை ‘சீதா ராமம்’ படத்தை தயாரித்த அஸ்வினி தத் தயாரிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வெற்றிபெற்ற ஜோடியை மீண்டும் நடிக்க வைக்க நினைத்துள்ள ஹனு ராகவபுடி, புதிய படத்தில் மீண்டும் துல்கர் சல்மான் ஜோடியாக மிருணாள் தாகூரை நடிக்க வைக்க பேசி வருகிறார். இப்படம் ‘சீதா ராமம்’ படத்தின் 2ம் பாகமாக உருவாகும் என்று கூறப்படுகிறது.

Related Stories: