பல நாடுகளில் மகேஷ்பாபு பட ஷூட்டிங்: ராஜமவுலி தகவல்

ஐதராபாத்: மகேஷ்பாபு படத்துக்கு பல நாடுகளில் படப்பிடிப்பு நடத்த உள்ளோம் என இயக்குனர் ராஜமவுலி கூறினார். ஆர்ஆர்ஆர் படத்துக்கு பிறகு மகேஷ்பாபு நடிக்கும் படத்தை ராஜமவுலி இயக்க உள்ளார். தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் இந்த படம் பான் இந்தியா படமாக உருவாக உள்ளது. இப்போது வேறொரு தெலுங்கு படத்தில் மகேஷ்பாபு நடித்து வருகிறார். அந்த படத்தை முடித்த பிறகு, அடுத்த ஆண்டு ஜூனில் ராஜமவுலி இயக்கும் படத்தில் அவர் நடிக்க இருக்கிறார். இந்த படத்துக்கும் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் கதை எழுதி வருகிறார்.

இது பற்றி ராஜமவுலி கூறும்போது, ‘எனது மற்ற படங்களிலிருந்து இந்த படம் வித்தியாசமாக இருக்கும். முழுக்க வெளிநாடுகளில் படமாக உள்ளது. ஆக்‌ஷன் அட்வேஞ்சர் படமாக இது இருக்கும்’ என்றார். ஜேம்ஸ் பாண்ட் பாணியிலான ஸ்டைலிஷ் படமாக இது உருவாக உள்ளதாகவும் டோலிவுட்டில் பேசப்படுகிறது. இந்த படத்துக்காக ரூ.500 கோடி செலவிட திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தில் நடிக்கும் ஹீரோயின், மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. ஆர்ஆர்ஆர் படத்தில் அலியா பட் நடித்தது போல், இதிலும் பாலிவுட் ஹீரோயின் ஒருவரை நடிக்க வைக்க முயற்சி நடக்கிறதாம்.

Related Stories: