பஹத் பாசில் படத்துக்கு சிக்கல்

திருவனந்தபுரம்: பஹத் பாசில் நடிக்கும் மலையாள படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மலையாளத்தில் உருவாகும் படம் ஹனுமான் கியர். இதில் பஹத் பாசில் நடிக்கிறார். சுதீஷ் சங்கர் இயக்குகிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் டப் செய்து வெளியிட உள்ளனர். தெலுங்கு மொழிக்காக இந்த படத்துக்கு டாப் கியர் என தலைப்பு வைக்கப்பட்டது. இதை அறிந்து, அதே பெயரில் தெலுங்கில் படமாக்கி வரும் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். டாப் கியர் பெயரில் உருவாகும் தெலுங்கு படத்தை கே.வி.ஸ்ரீதர் ரெட்டி தயாரிக்கிறார். சசிகாந்த் இயக்குகிறார். இதில் ஆதி சாய்குமார் ஹீரோவாக நடிக்கிறார். ‘இந்த படத்தின் தலைப்பு எங்களிடம் உள்ளது. முன்பே இதை பதிவு செய்து வைத்திருக்கிறோம். இதை யாருக்கும் தர முடியாது’ என ஸ்ரீதர் ரெட்டி தெரிவித்தார். இதையடுத்து பஹத் பாசில் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டது. தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் தரப்பிலும் ஸ்ரீதர் ரெட்டி படத்துக்கு ஒப்புதல் தரப்பட்டது. இதையடுத்து பஹத் பாசில் படக்குழுவினர் தங்களது படத்தின் தலைப்பை மாற்றிக்கொள்ள முடிவு செய்திருக்கிறார்கள்.

Related Stories: