பொன்னியின் செல்வன் எவ்வளவு நேரம் ஓடுகிறது?

சென்னை: பொன்னியின் செல்வன் படம் ஓடும் நேரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரகாஷ் ராஜ், பார்த்திபன் உள்பட பலர் நடித்துள்ளனர். மணிரத்னம் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் பங்கேற்றனர். இந்நிலையில் இப்படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் பொன்னியின் செல்வனுக்கு யுஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இந்த படம் 2 மணி நேரம் 46 நிமிடங்கள் ஓடுகிறது. படத்தின் முதல் பாதி 1 மணி நேரம் 21 நிமிடங்களும் அடுத்த பாதி, 1 மணி நேரம் 25 நிமிடங்களும் ஓடுகிறது.

Related Stories: