சினிமாவில் 15 மணி நேரம் உழைக்கிறோம்: ரகுல் உருக்கம்

சென்னை: சினிமாவில் கலைஞர்களும் டெக்னீஷியன்களும் 15 மணி நேரம் உழைக்கிறோம். அந்த உழைப்பை ரசிகர்கள் மதிக்க வேண்டும் என்றார் நடிகை ரகுல் பிரீத் சிங். சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்தில் நடித்துள்ள ரகுல் பிரீத் சிங், இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுடன் நடிக்கிறார். அவர் கூறியது: ஒரே சமயத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் நடிக்கிறேன். படப்பிடிப்புக்காக அடிக்கடி பல மாநிலங்களுக்கு செல்கிறேன். பயணம் எனது வாழ்க்கையில் ஒரு அங்கமாகிவிட்டது. எந்த ஊருக்கு படப்பிடிப்புக்கு சென்றாலும் மற்ற நடிகர், நடிகைகளின் வேலையையும் டெக்னீஷியன்களின் வேலையையும் பார்த்து பிரமிக்கிறேன். நான் உள்பட அனைவரும் கடுமையாக உழைக்கிறோம்.

இது எனது படத்தை வைத்து நான் சொல்வது கிடையாது. எல்லா ஹீரோக்கள், ஹீரோயின்களின் படங்களையும் வைத்துதான் சொல்கிறேன். ஒரு நாளைக்கு 15 மணி நேரம் வரை உழைக்கிறோம். அந்த உழைப்பு பற்றி ரசிகர்களுக்கு தெரிய வேண்டும். சினிமா துறை, கவர்ச்சியான துறை என மட்டும் நினைத்துக்கொள்கிறார்கள். அது தவறு. இங்கு எப்படியெல்லாம் கடுமையாக போராடி முன்னுக்கு வரவேண்டியுள்ளது என்பதை மற்றவர்கள் அறிய வேண்டும். இதற்காக மற்ற துறைகளில் உழைப்பு இல்லை என்றெல்லாம் சொல்லவில்லை. எல்லா துறையிலும் உழைப்பு இருக்கிறது. அதேபோலத்தான் சினிமாவிலும். அதனால் சினிமாவை மட்டும் எளிதில் பணம் கொட்டும் தொழிலாக பார்க்க வேண்டாம். இது கிளாமர் மீடியா கிடையாது. அதையும் தாண்டி பல விஷயங்கள் இருக்கின்றன. இவ்வாறு ரகுல் பிரீத் சிங் கூறினார்.

Related Stories: