×

ஹாலிவுட் நடிகை மரணம்

வாஷிங்டன்: கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த விபத்தில் சிக்கிய ஹாலிவுட் நடிகை அன்னே ஹெச், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஹாலிவுட் நடிகை அன்னே ஹெச் (53) கடந்த வாரம் தனது மினி கூப்பர் காரில் லாஸ் ஏஞ்சலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் மோதி விபத்துக்குள்ளானது. கார் மோதிய வேகத்தில் தீப்பிடித்து எரிந்தது. அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு வெஸ்ட் ஹில்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி அன்னே ஹெச் உயிரிழந்தார்.

இதுகுறித்து மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், ‘அன்னே ஹெச்சுக்கு மூளையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் அவர் கோமா நிலையில் இருந்தார். மூளையின் செயல்பாடுகள் அனைத்தும் இழந்த நிலையில் அவர் இறந்தார்’ என்றன. நடிகையின் மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவர், டோனி பிராஸ்கோ, சிடார் ரேபிட்ஸ், சைக்கோ ரீமேக் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED இடி மின்னல் காதல் விமர்சனம்