லெஸ்பியன் கதை படத்துக்கு எதிர்ப்பு

திருவனந்தபுரம்: மலையாளத்தில் உருவாகியுள்ள லெஸ்பியன் பட கதைக்கு எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. ஓடிடி தளத்தின் வளர்ச்சிக்கு பிறகு மலையாளத்தில் புதிய சிந்தனையுடன் தயாராகும் படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் வெளிவருவதற்கு முன்பே பரபரப்பாக பேசப்பட்டு வரும் படம் ஹோலி வாண்ட். அசோக் ஆர் நாத் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ள இந்த படத்தில் அம்ரிதா வினோத், ஜானகி சுதீர் ஆகியோர் நடித்துள்ளனர். ரோனி ரபேல் இசையமைத்துள்ள இப்படத்திற்கு உன்னி மடாவூர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் நாளை நேரடியாக ஓடிடியில் ரிலீசாக உள்ளது. அம்ரிதா வினோத்தும், ஜானகி சுதீரும் கதைப்படி பள்ளி பருவ தோழிகள். ஒருவர் ஒரு முரடனை திருமணம் செய்து கொண்டு அவனிடம் தினமும் செக்ஸ் டார்ச்சரை அனுபவிக்கிறார். இன்னொருவர் கன்னியாஸ்திரி ஆகிறார். ஒருவர் ஆணிடம் துன்பப்படுகிறார், இன்னொருவர் ஆண் வாசனையே இல்லாதவளாகிறார். ஒருகட்டத்தில் தோழிகள் இருவரும் லெஸ்பியன் ஆகிறார்கள். அதனை இந்த சமூகம் எப்படி எதிர்கொள்கிறது என்பதுதான் படத்தின் கதை. இந்த கதைக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. கிறிஸ்தவ அமைப்புகள் படத்தை எதிர்க்க தொடங்கியுள்ளன.

Related Stories: