
மும்பை: அலியா பட் படத்துக்கு சமூக வலைத்தளங்களில் திடீரென எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஷாருக்கான், அலியா பட் இணைந்து தயாரித்துள்ள இந்தி படம் டார்லிங்ஸ். இன்று நெட்பிளிக்சில் வெளியாகிறது. இதில் அலியா பட் நடித்துள்ளார். ஜஸ்மீத் ரீன் என்ற பெண் இயக்குனர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் கணவருக்கு எலி மருந்து கொடுப்பது, கட்டி வைத்து தாக்குவது, நான் இனிமேல் பீல்டிங் பண்ண மாட்டேன், பேட்டிங் ஆடப் போறேன் என மட்டையால் கணவனின் தலையில் அடிப்பது உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் கணவராக விஜய் வர்மாவும் அவரது மனைவியாக அலியாவும் நடித்துள்ளனர். இந்த காட்சிகளெல்லாம் குடும்ப வன்முறையை ஊக்குவிப்பதுபோல் உள்ளது. ஆண்களை கீழ்த்தரமாக காட்டுவது போல் உள்ளது என சமூக வலைத்தளத்தில் கருத்துகள் பரவ ஆரம்பித்துள்ளது. இதனால் பாய்காட் அலியா பட், பாய்காட் டார்லிங்ஸ் என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் நேற்று டிரெண்டிங் ஆனது.