பொன்னியின் செல்வனை இயக்க விரும்பிய ராஜமவுலி

சென்னை: பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பார்த்திபன், பிரபு, ஜெயராம், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு நடித்துள்ளனர். கல்கி எழுதிய இந்த நாவல் 5 பாகங்களைக் கொண்டது. இதை இரண்டு பாகமாக படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.‘பொன்னியின் செல்வன்’ நாவலை ஒரு வெப் தொடராக எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தனக்கு இருந்ததாக சமீபத்தித்தில் பேட்டி ஒன்றில் இயக்குனர் ராஜமவுலி கூறியிருக்கிறார். ‘தி கிரே மேன்’ படத்தின் இயக்குனர்களான ரூசோ பிரதர்ஸ் உடன் நடைபெற்ற ஒரு பேட்டியின்போது இந்தத் தகவலை அவர் சொல்லியிருக்கிறார். ‘ஆர்ஆர்ஆர்’ படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி மேற்கத்திய நாடுகளின் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதனால், நேரடி வெப் தொடரை இயக்கும் எண்ணம் இருந்ததா என்ற கேள்விக்கு ‘பொன்னியின் செல்வன்’யை பற்றி  ராஜமவுலி பேசியிருக்கிறார். இது பற்றி ராஜமவுலி கூறும்போது, ‘ஓடிடிக்கு வெப்சீரிஸ் இயக்குவதற்காக எனக்கு நிறைய அழைப்புகள், வாய்ப்புகள் வந்தன. பாகுபலி 3வது பாகத்தை வெப்சீரிஸாக இயக்கவும் கேட்டார்கள். எனக்கு 15 முதல் 20 மணி நேரம் வரை ஓடும் வெப்சீரிஸ்கள், 3, 4 சீசன்களாக இயக்க ஆசை இருந்தது. அப்படி விரும்பியபோது, நான் தேர்வு செய்தது பொன்னியின் செல்வன் நாவலைத்தான். இந்த கதை எனக்கு தெரியும். இதை நீண்ட நேரம் ஓடும் கதையாகத்தான் எடுக்க முடியும். அதே சமயம், இதை படமாக மணிரத்னம் இயக்க தொடங்கிவிட்டார். அதனால் இந்த திட்டத்தை பற்றி பிறகு நான் யோசிக்கவே இல்லை. நம்மிடம் இதுபோல் நிறைய கதைகள் இருக்கின்றன. எதிர்காலத்தில் அதில் ஒன்றை வெப்சீரிஸாக நான் இயக்கலாம்’ என்றார்.

Related Stories: