ரஜினி, கமல் இணைந்து நடிக்கும் படத்தை இயக்க அல்போன்ஸ் புத்ரன் ஆர்வம்

மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் புகழ்பெற்றவர் அல்போன்ஸ் புத்ரன். தற்போது நயன்தாரா நடிப்பில் கோல்ட் என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த நிலையில் கமல்ஹாசனும், ரஜினியும் இணைந்து நடிக்கும்படியான ஒரு கதையை எழுதியிருப்பதாகவும், அவர்களுக்காக காத்திருப்பதாகவும் அல்போன்ஸ் புத்ரன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் எழுதியிருப்பதாவது:

கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவருக்குமான ஒரு கதையை வைத்து உள்ளேன். கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரையும் சந்திக்க நேர்ந்தால் அவர்களுக்காக நான் உருவாக்கி வைத்திருக்கும் கதையை கூறுவேன். அந்த கதை நிச்சயம் இருவருக்கும் பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. எனக்கு அதிர்ஷ்டம் இல்லாததால் இன்னும் என் வாழ்நாளில் இருவரையுமே ஒரு முறை கூட சந்திக்கவில்லை.

ஆனால் அதே நேரத்தில் எனக்கு அதிர்ஷ்டம் இருந்து, எதிர்காலத்தில் கமல்ஹாசன் அல்லது ரஜினிகாந்தை சந்திக்க நேரிட்டால் அவர்களிடம் அந்த கதையை கூறுவேன்.  அந்த கதை அவர்களுக்கு பிடித்துவிட்டால் என்னுடைய முழு திறமையையும் அந்த படத்தில் பயன்படுத்தி, நல்லதொரு பொழுதுபோக்கு படமாக எடுப்பேன்.  என்று கூறியுள்ளார்.

Related Stories: