×

மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தொடங்கியது

விஷாலின் 33வது படமாக உருவாகும்  புதிய படமான 'மார்க் ஆண்டனி'யை ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்குகிறார்.  விஷாலின் 'எனிமி' படத்தைத் தயாரித்த எஸ். வினோத்குமார் மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் இப்படத்தை  தயாரிக்கிறார் முக்கிய வேடத்தில் எஸ்ஜே சூர்யா நடிக்கிறார் .விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்கிறார் . மேலும் சுனில்  வர்மா ,நிழல்கள் ரவி  ஆகியோர் நடிக்கிறார்கள் .

ஜி வி பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார் . அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக இப்படம் வெளியாக உள்ளது . இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன்  சென்னையில் தொடங்கியது .

Tags : Mark Anthony ,
× RELATED பயணக் கதையில் சந்தானம்