81 நிமிடத்தில் தயாரான படத்தில் கே.பாக்யராஜ் ஹீரோ

கின்னஸ் முயற்சியாக 81 நிமிடங்களில் தயாரான 3.6.9 என்ற படத்தில் பல வருடங்களுக்கு பிறகு ஹீரோவாக நடித்துள்ளார் கே.பாக்யராஜ். இதனை சிவ மாதவ் இயக்கி இருக்கிறார். ஒளிப்பதிவு மாரீஸ்வரன், இசை கார்த்திக் ஹர்ஷா. இப்படம்.  24 கேமராக்களில் ஒளிப்பதிவு செய்ய, 450 தொழில் நுட்ப கலைஞர்கள் பங்கேற்க, 75 க்குமேற்பட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ளது.  பரபரப்பான ஒரு சயின்ஸ் பிக்சன் திரில்லராக தயாராகி உள்ளது. படத்தில் நடித்திருப்பது பற்றி கே.பாக்யராஜ் கூறியதாவது:

இது சயின்ஸ் பிக்சன் படம் . 81 நிமிடம் தான் எடுக்க வேண்டும் என்பதால் 3 நாள் ரிகர்சல் செய்தார்கள். யாராவது சொதாப்பினால் என்ன செய்வது என்று பயமாக இருந்தது .ஆனால் இவர்கள் 1 மாதம் ரிகர்சல் செய்து வந்திருந்தார்கள். மிக கச்சிதமாக திட்டமிட்டு எடுத்தார்கள். இந்த படம் தமிழ் சினிமாவில் முக்கியமான படமாக இருக்கும். என்றார்.

Related Stories: