தனுஷுடன் வதந்தி ஓய்ந்த நிலையில் கிரிக்கெட் வீரரை காதலிக்கும் மிருணாள் தாக்கூர்

 

சென்னை: துல்கர் சல்மானுடன் நடித்த ‘சீதா ராமம்‘ என்ற படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர், மிருணாள் தாக்கூர். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் அவர், தனுஷை காதலிப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இத்தகவலை அவர்கள் உடனடியாக மறுத்துவிட்டனர். தனுஷ் எனக்கு நல்ல நண்பர் என்று சொல்லி, அந்த செய்திக்கு மிருணாள் தாக்கூர் முற்றுப் புள்ளி வைத்தார்.இந்நிலையில், மிருணாள் தாக்கூர் காதலரை பற்றிய ஒரு செய்தி வெளியாகிஇருக்கிறது.

அதன் படி, இந்திய கிரிக்கெட் அணி வீரரும், ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருபவருமான ஸ்ரேயாஸ் அய்யரை மிருணாள் தாக்கூர் ரகசியமாக டேட்டிங் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. சமீபகாலமாக அவர்கள் காதலிக்க தொடங்கியுள்ளனர் என்பதால், இந்த விஷயம் குறித்து தற்போது அறிவிக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. நண்பர்களின் பார்ட்டிகளில் மிருணாள் தாக்கூரும், ஸ்ரேயாஸ் அய்யரும் நேரில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வருகின்றனர். விரைவில் அவர்கள் திருமண அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று தெரிகிறது.

Related Stories: