நண்பருக்காக நண்பர் இயக்கிய படம்

டேக் ஓகே புரொடக்‌ஷன் சார்பில் வெங்கட் ரெட்டி தயாரித்து நடித்திருக்கும் படம் யாரோ. உபாசனா ஹீரோயின். இந்த படத்தை வெங்கட் ரெட்டியின் நண்பர் சந்தீப் சாய் இயக்கி உள்ளார். இருவரும் அமெரிக்காவில் ஒன்றாக ஐடி துறையில் பணியாற்றுகிறவர்கள். கே.பி.பிரபு ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜோஸ் ஃப்ராங்க்ளின் இசை அமைத்துள்ளார். படம் பற்றி வெங்கட் ரெட்டி கூறியதாவது: எனது நண்பர் சாய் சந்தீப் ஒரு குறும்படம் இயக்கினார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனக்கு ஒரு சினிமா பண்ணித் தர முடியுமா என்று கேட்டேன். அதற்காக அவர் தன் பணியை விட்டுவிட்டு இயக்கி கொடுத்திருக்கிறார்.

இது ஒரு சைக்கோ-த்ரில்லர் திரைப்படம் , இது ஒரு தொடர் கொலை மர்மத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்ட கதை. படத்தை திட்டமிட ஆரம்பித்த போதே, நிறைய சிக்கல்கள் வந்தது. அதையெல்லாம் தாண்டி தான் இப்படத்தை எடுத்தோம். கடந்த 6 வருடத்தில் நான் அதிகம் பேசியது சந்தீப் உடன் தான். நிறைய சண்டை போட்டிருக்கிறோம், எப்போதும் ஒரு சிறந்த நண்பனாக இருந்திருக்கிறார். எனக்காக ஒரு மிகச் சிறந்த பாத்திரத்தை இந்த படத்தில் உருவாக்கி தந்திருக்கிறார்.  ஒரு புதுமையான ஹாரர் திரில்லராக இப்படத்தை உருவாக்கியுள்ளோம். என்றார்.

Related Stories: