பார், பப் கலாச்சார பின்னணியில் உருவாகும் வெப்

வேலன் புரடக்சன்ஸ் சார்பில் வி.எம். முனிவேலன் தயாரிக்கும் படம் 'வெப்'. அறிமுக இயக்குனர் ஹாரூன்  இயக்கியுள்ளார். நட்டி என்கிற நடராஜன் சுப்பிரமணியம் கதாநாயகனாக நடிக்கிறார். 4 நாயகிகள் நடிக்கும் இப்படத்தில் 'காளி' மற்றும் 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படங்களில் நாயகியாக நடித்த ஷில்பா மஞ்சுநாத் முதன்மை நாயகியாக நடிக்கிறார். 'எல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துப்பான்' படத்தின் நாயகி ஷாஸ்வி பாலா, 'முந்திரி காடு'  'கண்ணை நம்பாதே' படங்களில் நடித்த சுபப்ரியா மலர் மற்றும் விஜே அனன்யா மணி ஆகியோர் மற்ற 3 நாயகிகளாக நடிக்கிறார்கள்.

இவர்களுடன் மொட்ட ராஜேந்திரன், முரளி, தீப்ஸிகா, பாரதா நாயுடு மற்றும் ப்ரீத்தி உள்பட பலர் நடிக்கின்றனர். கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். கிறிஸ்டோபர் ஜோசப் ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றி இயக்குனர் ஹாரூன் கூறியதாவது: சிலந்தி வலையில் மாட்டிக்கொண்டு வெளியேற துடிக்கும் பூச்சிகளின் போராட்டத்தை போன்று இந்த கதை உருவாகி உள்ளது. ஐடி தொழில்துறை வளர ஆரம்பித்த பின்பு கிழக்குக் கடற்கரை சாலையில் புதிதாக உருவெடுத்த பார், பப் கலாச்சாரத்தை மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்சுகள், ஓட்டல்களில் படப்பிடிப்பு நடத்தி உள்ளோம். என்றார்.

Related Stories: