ஷ்யாம் சிங்கா ராய் தமிழ் பதிப்பு ஒடிடியில் வெளியானது

நானி, சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி, மடோனா செபஸ்டின், முரளி ஷர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான தெலுங்கு படம் 'ஷ்யாம் சிங்கா ராய்'. ராகுல் சங்க்ரித்யன் இயக்கிய இந்த படத்திற்கு சானு ஜானன் வர்க்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், மிக்கி ஜே.மேயர் இசை அமைத்துள்ளார்.

இந்த படத்தை தெலுங்கு, தமிழில் ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். சில காரணங்களால் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று தெலுங்கில் மட்டுமே தியேட்டர்களில் வெளியானது. தமிழ் நாட்டில் வெளியாகவில்லை. தற்போது தமிழ் பதிப்பை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளார்கள்.  நெட்பிளிக்சில் வெளியான ஆங்கிலம் அல்லாத படங்களின் டாப் டென் பட்டியலில் இந்த படம் 3வது இடத்தை பிடித்துள்ளது.

Related Stories: