3 ஹீரோயின்கள் எதற்கு?

தமிழ் படம், தமிழ் படம் 2 படங்களை இயக்கியவர் அமுதன். இவர் விமல் நடிப்பில் ரெண்டாவது படம் என்ற படத்தை இயக்கினார். பைனான்ஸ் பிரச்னை காரணமாக இந்த படம் ரிலீசாகவில்லை. இந்நிலையில் தனது காமெடி பட பாணியிலிருந்து மாறி திரில்லர் கதையை அமுதன் இயக்குகிறார். விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்துக்கு ரத்தம் என தலைப்பிட்டுள்ளனர். இதில் ரம்யா நம்பீசன், மஹிமா நம்பியார், நந்திதா என 3 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள்.

‘கதைக்கு தேவை என்பதால்தான் படத்தில் 3 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். கவர்ச்சிக்காக அவர்களை பயன்படுத்தவில்லை. மூன்று நாயகிகள் இருந்தாலும் விஜய் ஆண்டனிக்கு ஒருவர்தான் ஜோடியாக இருப்பார். அவருடன் மட்டும்தான் படத்தில் அவர் டூயட் பாடுவார். அந்த நடிகை யார் என்பது சஸ்பென்ஸ். படத்துக்காக விஜய் ஆண்டனி தாடி வைத்த கெட்அப்பில் வருகிறார். பிச்சைக்காரன் படத்தில் தாடி முகத்துடன் அவர் நடித்திருந்தாலும் இந்த கெட்அப் வேறு மாதிரியாக இருக்கும்’ என்கிறது படக்குழு.

Related Stories: