×

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரம் பிரியங்காவை விளாசிய எழுத்தாளர் தஸ்லிமா நஸ்‌ரின்: சமூக ஊடகங்களில் காரசார விவாதம்

புதுடெல்லி: வாடகை தாய் மூலம் பிரபல நடிகை குழந்தை பெற்ற விவகாரம் குறித்து வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்‌ரின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக ஊடகங்களில் காரசார விவாதம் நடைபெற்று வருகிறது. பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா - ஹாலிவுட் நடிகர் நிக் ஜோனாஸ் தம்பதியினர் சமீபத்தில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டனர். இவர்களை பாலிவுட் பிரபலங்கள் ஆத்தியா ஷெட்டி, விக்கி கவுஷல், அர்ஜுன் கபூர் மற்றும் பலர் பாராட்டினர். ஆனால் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது சரியா என்ற கேள்வி பல்வேறு தரப்பிலும் எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், இந்த வாடகை தாய் முறைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘ஏழைப் பெண்கள் என்பதாலேயே வாடகை தாய் மூலம் குழந்தை பெறுவது சாத்தியமாகிறது. செல்வந்தர்கள் சமூகத்தில் உள்ள வறுமையை போக்க வேண்டும். அவர்கள் குழந்தையை வளர்க்க விரும்பினால் வீடு, நாடு தெரியாத அனாதை குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க வேண்டும். வாடகை தாய் மூலம் பெறப்படும் குழந்தை முறையானது ஒருவகை சுயநல ஈகோ. இதுபோன்று ‘ரெடிமேட்’ குழந்தைகளை பெறுவதன் மூலம் அவர்கள் (பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனாஸ்) எப்படி உண்மையான பெற்றோராக இருக்க முடியும்? சாதாரண முறையில் குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்கள், வாடகை தாய் மூலம் பெற்ற குழந்தைகளுடன் எப்படி நெருங்கிய உறவை வைத்துக் கொள்ள முடியும்?’ என்று கேள்வி எழுப்பி உள்ளார். அதேநேரம் தஸ்லிமா நஸ்ரினின் கருத்துக்கு நெட்டிசன்கள் சிலர் ஆதரவாகவும், சிலர் எதிர்ப்பு கருத்தும் தெரிவித்துள்ளனர். இது சமூக ஊடகங்களில் காரசார விவாதமாக மாறியுள்ளது.

Tags : Priyanga Vlasia ,Taslima Nasrin ,
× RELATED சிறகன் விமர்சனம்