மார்ச் 4ம் தேதி வெளிவருகிறது பேட்மேன்

பேட்மேன் பட வரிசையில் டார்க் நைட், டார்க் நைட் ரிட்டர்ன்ஸ் படங்களுக்குப் பிறகு ஸாக் ஸ்னைடர் இயக்கத்தில் பென் ஆஃப்லெக் பேட்மேனாக நடிக்க, 'பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன், 'ஜஸ்டிஸ் லீக்' ஆகிய படங்கள் வெளியாயின. அடுத்த பேட்மேன் படம் தயாராகி உள்ளது. ராபர்ட் பேட்டின்சன் பேட்மேன் கதாபாத்திரத்தில் நடிக்க, மேட் ரீவ்ஸ் இயக்கி உள்ளார். கொரோனா பிரச்சினையால் தடைபட்டிருந்த இதன் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது படம் வெளியீட்டுக்கு தயாராகி விட்டது. இப்படம் வரும் மார்ச் மாதம் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Related Stories: