நடிகை பிரியங்கா ஜவால்கருக்கு கொரோனா

விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த டாக்ஸிவாலா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியங்கா ஜவால்கர். அதன்பிறகு திம்மருசு, எஸ்.ஆர்.கல்யாணமண்டபம் மற்றும் கமனம் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது அவருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:  எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்தாலும், மருத்துவ பரிசோதனையில் கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.. எனது மருத்துவரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி நான் தற்போது தனிமையில் இருக்கிறேன், மேலும் தேவையான மருந்துகளையும் எடுக்க ஆரம்பித்துள்ளேன். அனைவரும் வீட்டிலேயே இருக்கவும், பாதுகாப்பாக இருக்கவும், அத்தியாவசிய பொருட்களுக்கு வெளியே செல்ல முகமூடியை அணியவும் . கடந்த சில நாட்களில் என்னைச் சந்தித்த அனைவரையும் தங்களைப் பரிசோதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: