கருணாஸ் கதை நாயகனாக நடிக்கும் ஆதார்

அம்பாசமுத்திரம் அம்பானி, சந்தமாமா, திண்டுக்கல் சாரதி படங்களில் கதையின் நாயகனாக நடித்த கருணாஸ் சிறிய இடைவெளிக்கு பிறகு கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ஆதார். ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த படத்தில் கருணாசுடன்  அருண்பாண்டியன், திலீபன், பிரபாகர், ரித்விகா, இனியா. உமா ரியாஸ்கான்  உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்திருக்கிறார். வெண்ணிலா கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில்  பி. சசிகுமார்  தயாரித்திருக்கிறார். படத்தைப் பற்றி இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் கூறியதாவது: எளிய மனிதர்களின் வலியை பேசும் யதார்த்த சினிமாவாக ஆதார்உருவாகியிருக்கிறது. ஆதார் தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு நகர்த்தும். என்றார்.

Related Stories: