போர்கள மருத்துவர்கள் பற்றிய படம்

போர்களங்களை மையமாக வைத்து ஏராளமான படங்கள் வெளிவந்துள்ளது. போர்களத்தில் பணியாற்றும் மருத்துவர்களை மையமாக கொண்டு உருவாகி வரும் படம் சல்லியர்கள். இதனை கருணாஸ் தயாரித்து நடிக்கிறார். மேதகு படத்தை இயக்கிய கிட்டு இயக்குகிறார். சத்யாதேவி, திருமுருகன், மகேந்திரன் உள்பட பலர் நடிக்கிறார்கள். படம் பற்றி கிட்டு கூறியதாவது: ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடியே நம் தமிழர்களின் போர்ப்படையில் மருத்துவ பிரிவு இருந்துள்ளது. அப்படி ராஜேந்திர சோழனின் படைப்பிரிவில் முக்கியமான படைப்பிரிவாக சல்லியர்கள் பணியாற்றி உள்ளனர்.

போரின்போது வீரர்கள் உடலில் பாய்ந்த ஆயுதங்களை அகற்றி காயங்களுக்கு மருத்துவம் பார்ப்பது அவர்களின் பணியாக இருந்துள்ளது. திருமுக்கூடல் கல்வெட்டில் இதற்கான ஆதாரங்களும் உள்ளன. தமிழ் சினிமாவில் இதுவரை பார்க்காத ஒரு புதிய லேயரை இந்தப் படத்தில் ரசிகர்கள் பார்ப்பார்கள். இதுபோன்ற கதைகள், இன்னும் சொல்லப்படாமால் இருக்கும் வலிகள் நிறைய இருக்கின்றன. போர்க்களத்தை மையப்படுத்தி தமிழில் வெகுசில படங்களே வெளியாகியுள்ளன. அந்தவகையில் சமகாலத்தில் நம் கண் முன்னே தமிழ் நிலத்தில் நடந்த போர் ஒன்றை மையப்படுத்தி சல்லியர்கள் படம் உருவாகியுள்ளது.  என்றார்.

Related Stories: