கவுதம் மேனன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ்

கெளதம்மேனன் தற்போது வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கி வருகிறார். இதில் சிம்பு, சித்தி இதானி நடிக்கிறார்கள். இதுதவிர ஜோஷ்வா இமைபோல் காக்க படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களையும் வேல்ஸ் பிலிம் இண்டர் நேஷனல் சார்பில் ஐசரி  கணேஷ் தயாரிக்கிறார். அடுத்து தயாரிக்கும் படத்தையும் கவுதம் மேனனே இயக்குகிறார். இதில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். இது ஹாரர் காமெடி படமாக உருவாக இருக்கிறது.

Related Stories: